கட்டுநாயக்க பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைக்குண்டை வீச முற்பட்ட நபரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கட்டுநாயக்க, மடவளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பலியானவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.