தற்போது வௌியான செய்தி – ஜனாதிபதி ரணில் அழைப்பு தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் முக்கிய அறிவிப்பு

Latest News

அமைச்சு பதவியை எடுக்குமாறே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரு முறை அழைத்தார்,குறுஞ்செய்தி அனுப்பியதாக அப்பட்டமாக பொய் கூறுகிறார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இன்றைய (23-02-2023) பாராளுமன்ற உரை ஒரு ஜோக்காக இருந்ததாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தான் தொடர்பாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கூறியது தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதலளிக்கும் விதமாகவே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறும் போது;

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாமென தனக்கு ஒருபோதும் குறுஞ்செய்தி (SMS) அனுப்பவில்லை எனவும் ஜனாதிபதி மக்கள் அவதானங்களை திசை திருப்பும் விதமாக இல்லாத விடயத்தை சோடித்து கூறுவதாகவும்,உயரிய சபையில் இவ்வாறு கருத்துத் தெரிவிப்பது அநுபவமும் முதிர்ச்சியும் மிக்க அரசியல் தலைவருக்குரிய பக்குவம் வாய்ந்த நடத்தையாக அமையாது எனவும் அவர் தெரிவித்தார்.ஜனநாயகம்,
லிபரல்வாதம் பற்றி பரப்புரை நடத்தும் ஜனாதிபதியின் அரசியல் போக்கு தற்போது மாறியிருப்பதை இன்றைய பாராளுமன்ற நடத்தை நன்றாக புலப்படுத்துவதாகவும்,
உண்மையான ஜனநாயகவாதியாக இருந்தால் மக்கள் இறையாண்மை,மக்கள் ஆணை,தேச நலனை கருத்திற் கொண்டு மக்களுக்காகவும் நாட்டுக்காகவுமே சிந்தித்து தமது அரசியல் நடந்தையை ஒழுங்கமைத்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஒருமுறை பாராளுமன்றத்தில் வைத்து என்னுடன் கதைத்தார்.அதற்கு முன்னதாக அநுரகுமாரவுடன் உரையாடிக் கொண்டிருந்ததை அவதானித்தேன்.எனக்கு அமைச்சுப் பதவியை பாரமெடுக்குமாறு 2 முறை வேறுவேறு ஆட்களை அனுப்பி அழைப்பு விடுத்தார்.எனக்கு என்ன வேண்டுமென்றும் அவரால் அனுப்பி வைக்கப்பட்ட பிரதிநிதிகள் என்னிடம் கேட்டார்கள்.இதை தான்டிய ஒரு பேச்சோ அல்லது தகவல் பரிமாற்றமே எமக்குள் இடம் பெறவில்லை.இருந்தபோதும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாமென்று,அல்லது அவரது பிரதிநிதிகள் மூலமோ அவ்வாறான குறுச்செய்தி SMS ஒன்றை ஜனாதிபதி ரணில் எனக்கு அனுப்பவில்லை.அவர் அப்படி ஒரு SMS எனக்கு அனுப்பியதாக கூறுவது அப்பட்டமான பொய்யாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *