தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற கருத்தை அனைவருமே கேள்வி பட்டிருப்போம். ஏனெனில் ஆப்பிளில் அந்த அளவில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என்று உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சத்துக்கள் உடலை வலுவோடு வைப்பதுடன், எந்த நோயும் உடலைத் தாக்காத வகையில் நோயின்றி ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. அதனால் தான், நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச் செல்லும் போது, ஆப்பிளை வாங்கிச் செல்கின்றனர்.

இத்தகைய ஆப்பிள் உடலை ஆரோக்கியத்துடன் மட்டுமின்றி, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவியாக உள்ளது. சிலருக்கு ஆப்பிள் சாப்பிட பிடிக்காது, அவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் ஆப்பிளை ஜூஸ் போட்டு வேண்டுமென்றாலும் குடிக்கலாம். நாம் ஆப்பிள் எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அந்த அளவில் குறிப்பாக ஆப்பிளானது உடல் எடையை குறைக்கவும், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.

சரி, இப்போது அந்த ஆப்பிளை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, தினமும் ஆப்பிள் சாப்பிடும் பழக்கத்தை கொள்ளுங்களேன்.. அல்சீமியர் நோய் இதன் மற்றொரு நன்மை என்னவென்றால், ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.

நீரிழிவு இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. எனவே நீரிழிவு உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.

உடல் வலிமை ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான க்யூயர்சிடின், உடலில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் செல்களின் வலிமை அதிகரித்து, நுரையீரலுக்கு சீரான இரத்த ஓட்டத்தை வழங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.

அழகாக சருமம் ஆப்பிளில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இருப்பதால், அவை சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் தினமும் இதை சாப்பிட்டு வந்தால், அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல் அழிவைத் தடுத்து, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எடை குறைவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பெக்டின் அதிகம் உள்ளதால், அவை உடலை கட்டழகுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் உள்ள பாலிஃபீனால், உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே எடை குறைய விரும்புவோர், ஆப்பிளை தினமும் சாப்பிடுவது சிறந்தது.

By Health

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *