விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் உரிய திடங்களோடு வருவார் என பழ.நெடுமாறன் கூறியதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அது உண்மை தான் என கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தனது கருத்துவழங்கிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
காசி ஆனந்தனும், தானும், பழ.நெடுமாறனும் 79க்கு பிற்பட்ட கலப்பகுதிகளில் தலைவர் பிரபாகரனோடு பயணித்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
விடுதலைப்புலிகளின் காலத்தில் பொருளாதார நெருக்கடிகள் இல்லாது அனைத்து வாழ்வாதாரங்களோடும் மக்கள் இருந்தனர் என்றும் அப்படி ஒரு சிறந்த நிர்வாகத்தை பிரபாகரன் நடத்தினார் என்றும் தெரிவித்தார்.
ஆனால் ராஜபக்சக்கள் வெளிநாடுகளின் உதவி இருந்தும் நாட்டில் மக்கள் வாழமுடியாத நிலையை ஏற்படுத்தி நாட்டு மக்களாலே விரட்டி அடிக்கப்பட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.