கொழும்பில் நண்பகல் வேளையில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் கொழும்பு மருத்துவபீட மாணவி கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் தனது காதலனால் கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை நாடளாவியரீதியில் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அடிப்படையில் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டமையே மாணவி சத்துரிகா ஹன்சிகாவின் மரணத்திற்கான காரணம் என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (27) தீர்ப்பளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைகள் என்பனவற்றை கவனத்தில் கொண்டதன் பின்னர் நீதவான் இந்த விசாரணை முடிவடைந்ததாக அறிவித்து இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்குமாறு குருதுவத்தை பொலிஸாருக்கு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.