அடுத்த வாரம் நிலநடுக்கம் – கொழும்பு உட்பட பதிக்கப்பட போகும் நகரிங்களின் விபரம்

Latest News

இந்தியாவின் ஹிமாச்சல் – உத்தரகாண்ட மாநிலங்களில் எதிர்வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரிகை விடுத்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்படுமாக இருந்தால் அது இலங்கையின் கொழும்பின் பல முக்கிய பிரதேசங்களை பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.

பொதுவாக நிலநடுக்கங்கள் எப்போது ஏற்படும் என்று சரியாக கணிக்க முடியாது, இருப்பினும் அவை ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் விளைவுகள் ஏற்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காண முடியும் என பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.

சிரேஷ்ட பேராசிரியரின் கருத்துப்படி, இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட்டால், அதன் பாதிப்புகள் திருகோணமலை, மனம்பிட்டிய, மினிபே, பிபில, மொனராகலை, புத்தல, வெல்லவாய, அம்பலாந்தோட்டை, உஸ்ஸங்கொடை வரை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *