பெண்ணொருவரும் ஆண்கள் இருவருமே அந்த யாசகரிடமிருந்த கைக்குழந்தையை பலவந்தமாக பிடுங்கி, முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம், கடந்த 28 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து அந்த பெண் யாசகர் பம்பலப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பம்பலப்பிட்டியவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு முன்பாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த போது ஓட்டோவில் வந்திறங்கிய மூன்று பேர் கொண்ட குழுவினர், அந்தக் குழந்தைக்கு ஆடைகளை வாங்கி தருவதாகக் கூறி, அப்பெண்ணையும் முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு தெமட்டகொடை பகுதியில் ஆடை விற்பனை நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு முச்சக்கரவண்டியின் கட்டணத்தை செலுத்தி முச்சக்கரவண்டியை அனுப்பி வைத்துள்ளனர்.
புடவை கடைக்குச் சென்றவர்கள் சுமார் 1,900 ரூபாய்க்கு ஆடைகளை குழந்தைக்காக கொள்வனவு செய்த பின்னர் அதனை குழந்தைக்கு ஆடைகளை அணிவித்த பின்னர். அங்கிருந்து மற்றுமொரு முச்சக்கரவண்டியில் ஏறி, கொம்பனி வீதிக்கு வந்துள்ளனர்.
அங்குள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாகவிருக்கும் வாகன தரிப்பிடத்துக்கு முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றுள்ளனர். ஆட்டோவில் இருந்த பெண், கைக்குழந்தை தன்னிடம் தாருமாறும் தான் தூக்கிக்கொண்டு வருவமாகவும் யாசகரிடம் (பெண்) கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும், அதற்கு அந்த பெண் யாசகர் ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது குறித்த பெண்ணுடன் வந்திருந்த ஆண், தன்னை தாக்கி ஓட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டு, கைக்குழந்தையுடன் தப்பியோடிவிட்டனர்.
பொலிஸாரிடம் இதுதொடர்பில் பெண் யாசகரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தார்.
தன்னுடைய குழந்தை இல்லாது அந்த பெண் யாசகர் கதறி அழுதுகொண்டிருக்கின்றார் என தெரிவித்த பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், குழந்தையை கடத்தியவர்கள் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் இதுவரையில் கிடைக்கவில்லை. எனினும், குழந்தை பாக்கியம் இல்லாத ஜோடியே இந்தக் குழந்தையை கடத்தியிருக்கவேண்டும் என் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.