தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மீண்டும் தெரிவித்துள்ளார்.
. இந்தநிலையில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப்போவதாக உலகத் தமிழர் கூட்டமைப்புத் தலைவர் நெடுமாறன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் உயிருடன் உள்ளதாகவும், விரைவில் அவர் பொது வெளியில் வருவார் என்றும் பழ.நெடுமாறன் அண்மையில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்திருந்தார்.
இருப்பினும, இந்த கூற்றை மறுத்த இலங்கையின் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ரவி ஹேரத், அவர் தற்போது உயிருடன் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.