மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் தடைப்பட்டிருந்த யாழ்தேவி புகையிரத சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக 2 மணித்தியாலங்களுக்கு மேல் புகையிரத சேவை தாமதமானதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தடம் புரளாமல் இருந்த ரயிலின் முன்பெட்டிகளுக்கு பயணிகள் மாற்றப்பட்டு கொழும்பு கோட்டை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் நிகவெரட்டிய மற்றும் மொரகொல்லாகம இடையிலான வீதி போக்குவரத்தும் தடைபட்டது.