இன்றைய நவீன உலகில் நாளுக்கு நாள் வேலைகள் அதிகரித்து செல்வதனால் தங்கள் உடல் தேவைகளை கவனம் கொள்வது இல்லை.
இன்றைய நவீன வாழ்வியல் முறையில் மனிதர்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று , முடி உதிர்வு.
இன்றைய காலகட்டத்தில் இருபாலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்னை என்றே சொல்லாம்.
ஒரு தனிநபருக்கு முடி அழகை தருவதோடு மட்டும் அல்லாது அவருடைய ஆளுமை நமக்குத் தேவையான தன்னம்பிக்கையையும் தரக்கூடியது.
தனக்கு முடிவழரவில்லை என்பதற்காக பலரும் மாற்று சிகிச்சை, ஸ்பாவுக்குச் செல்லுதல், ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்வது… எனப் பலரும் பல வழிகளைக் கையாளுகிறார்கள். ஒரு பக்கம் இவற்றால் கிடைக்கும் பலனைவிட பக்க விளைவுகள் அதிகம்.
நன்றாக முடி வளர எளிய செய்முறைகள் சில உள்ளன. அவற்றை நாம் வீட்டிலேயே செய்துகொள்ளலாம். அப்படிப்பட்ட சில வழிமுறைகள் நாம் இங்கே பதிவிற்றுஇருக்கிறோம்.
வேப்பிலையை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் தலைமுடியை அலசுவதின் மூலம் தலை முடி உதிர்வை தடுக்கலாம்.