Breaking எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அறிவிப்பு

Latest News

எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (10) உரையாற்றும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் காரணமாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது.

இதனால் கடந்த சில நாட்களாக ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருகின்றது, புதிய எரிபொருள் இருப்புக்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதன் நன்மைகளை நுகர்வோர் விரைவில் பெற்றுக் கொள்வார்கள். இந்த விலை குறைப்பிற்கு பிறகு ஏனைய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *