யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள பொது சந்தை வழமைக்கு

Latest News

மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள 19ஆம் கட்டை பொதுச்சந்தை மீண்டும் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.

யுத்த காலங்களின் பின்னராக முடங்கிப்போயிருந்த முழங்காவில் 19ஆம் கட்டை சந்தை கடந்த 13 வருடங்களுக்கு பின்னர் இயங்க ஆரம்பித்துள்ளது.

அதேவேளை சந்தைப் பகுதியிலிருந்த பூநகரி பிரதேச சபைக்கு சொந்தமான கடைகளும் முற்றாக மூடப்பட்டேயிருந்தது.

அதன் பின்னரான காலப்பகுதியில் அந்த சந்தைப் பகுதி காடு பற்றிப்போயிருந்த நிலையில், பிறகு அச்சந்தைப் பகுதி மதுபோதையர்களால் இரவு நேர வதிவிடமாக பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்‍கு பெருமளவிலான வியாபாரிகள் வருகை தரத் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களும் இலகுவில் தமது சேவைகளை பெறத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *