பிரபல தொகுப்பாளராக சின்னத்திரையில் கலக்கி வருபவர் அர்ச்சனா. அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிவ் கலந்துகொண்ட நிலையில் அதில் அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்தார். அதன் பின் அவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் மகளுடன் சேர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்.
அர்ச்சனாவின் கணவர் வினீத் தற்போது இந்திய கடற்படையில் வேலைசெய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அர்ச்சனா மற்றும் வினீத் இருவரும் விவாகரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவிதார்.
குறித்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.”இருவரும் வெவ்வேறு துறையில் இருப்பதால் பிரச்சனை வந்தது, ஒரு மாதத்திற்கு முன்பு பிரிய முடிவெடுத்துவிட்டோம். ஆனால் 15 நாட்கள் முன்பு கணவர் வினீத்துக்கு திடீரென விசாகபட்டினத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டு போட்டுவிட்டார்கள்.”
“என் மகள் ஸாரா எங்கள் இருவரிடமும் பேசியுள்ளார். ஒருவரை விட்டு இன்னொருவர் எவ்வாறு வாழ முடியுமா என யோசித்துக்கொள்ளுங்கள் என்றாள். 20 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தோமே அப்படிதான் தற்போதும் இருகிறோம்” எனறு அர்ச்சனா தெரிவித்துள்ளார்.