பொரளையில் காதலடனுன் சேர்ந்து 28 வயது இளம் பெண் செய்த மோசமான செயல்

Latest News

பொரளை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 28 வயதுடைய பெண்ணுக்கு சொந்தமான வீடொன்று பண மோசடியின் கீழ் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவரது கணக்கில் உள்ள இரண்டு கோடி ரூபாயும், காதலன் கணக்கில் இருந்த எட்டு கோடி ரூபாயும், குறித்து குற்ற விசாரணை பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒரு கிலோ 225 கிராம் ஹெரோயின் மற்றும் 868,900 ரூபாய் பணத்துடன் 2021 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த, 2021 ஜனவரி 06 ஆம் திகதி வெலிவேரிய, கிரிக்கித்த பிரதேசத்தில் வீடுடன் கூடிய காணியொன்றை 5,700,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த காணி மற்றும் வீட்டை கொள்வனவு செய்வதற்கு சந்தேகநபர் எவ்வாறு பணம் சம்பாதித்தார் என்பதை நிரூபிக்க தவறியதன் பேரில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மஹர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *