Breaking : சாதாரண தர பரீட்சையை நடத்துவதில் கால தாமதம்

Latest News

2022 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக சாதரணதர பரீட்சையை நடத்துவதில் கால தாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதோ அது சாதரண தர பரீட்சையை நடத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தும்.

பரீட்சை திணைக்களத்திற்கு இரண்டு பரீட்சைகளுக்கு இடையில் குறைந்தது மூன்று மாத இடைவெளி தேவை. எனவே, திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்த முடியுமா என்பதை அமைச்சு எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *