பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்!

Latest News

பண்டாரகம பிரதேச சபையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மீது நான்கு பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான பிரதான பாதுகாப்பு அதிகாரி சிகிச்சைக்காக பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரகம பொதுச் சந்தைக் கட்டிடத்தில் அமைந்துள்ள பிரதேச சபை அலுவலகத்தின் நுழைவாயிலை அடைத்து நிறுத்தப்பட்டிருந்த காரை அகற்றுமாறு பாதுகாப்பு அதிகாரி காரில் இருந்தவர்களிடம் அறிவித்துள்ளார்.

ஆனால், அவர்கள் அதை புறக்கணித்ததால், வீதி தடைப்படும் என்பதால், அந்த இடத்தில் இருந்து அவர்களது காரை அகற்றுமாறு பாதுகாப்பு அதிகாரி மீண்டும் அவர்களுக்கு அறிவித்தார்.

அப்போது காரில் இருந்தவர்கள் வெளியே வந்து பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

இந்நிலையில், குறித்த காரின் பதிவு இலக்கத்தின் ஊடாக தாக்குதலுக்கு உள்ளான சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *