அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 84 சதமாகவும், விற்பனை பெறுமதி 335 ரூபா 68 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இந்த மாத ஆரம்ப முதல் அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *