யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்பாக இன்று (17) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.