திருமணமாகாத யுவதிக்கு கர்ப்பமாக இருப்பதாக கூறி பண மோசடி..!

Latest News

வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்று வந்த திருமணமாகாத யுவதி கர்ப்பமாக இருப்பதாக கூறி பணம் மோசடி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் பலாங்கொட வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

குறித்த யுவதிக்கு கருக்கலைப்பு செய்வதற்காக பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் யுவதி பாட்டியிடம் 43ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடடை திருமணமாகாத யுவதியும் பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரும் இணைந்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக பொலிஸாரிடம் முன்வைத்துள்ளனர்.

கர்ப்பம் என தெரிவிக்கப்பட்ட யுவதியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும், தற்போது குறித்த யுவதி அவரின் பாட்டியுடன் வசித்து வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் வௌியாகியுள்ளது.

குறித்த யுவதிக்கு பல தடவைகள் வயிற்றுவலி காரணமாக குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் பணிப்பெண், பாட்டியிடம், இந்த யுவதிக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும், அதனை நீக்க மருந்து கொடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கும் தெரியாமல் ரகசியமாக, தன்னால் செய்ய முடியும் என்றும் அதற்கு 43 ஆயிரம் ரூபாய் வழங்குமாறும் தெரிவத்துள்ளார்.

யுவதிக்கு சில மருந்து மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் அதன் பின்னர் வயிற்று வலி குணமாகியதாகவும் பாட்டி குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அந்த யுவதி கர்ப்பமாக இல்லை என்பதை அறிந்ததாகவும் பாட்டி முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வந்த போது, கர்ப்பமாக இருப்பதாக பயமுறுத்தி 43ஆயிரம் ரூபாவை மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *