பெண்களின் அழகை மெருகேற்றுவதில் உதடுகளும் மிக முக்கியமான பங்கு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே
என்ன தான் உதட்டிற்கு செயற்கையாக அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி அழகுபடுத்தினாலும், இயற்கையாகவே உங்க உதடுகள் சிவப்பு நிறத்தில் பட்டு போன்று மென்மையாக காணப்பட்டால் அது தனி அழகுதான்.
இன்றைய காலகட்டத்தில் அதிக பேருக்கு சிவப்பு நிற உதடுகள் காணப்படுவதில்லை. பலருக்கு கருப்பாகவே காணப்படும். இவற்றை ஒரு சில இயற்கை முறையில் எவ்வாறு சரிசெய்யலாம் என்று பார்போம்.
தற்போது கருப்பாக உள்ள எங்கள் உதடுகளை எப்படி அழகுப்படுத்தலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
சிறிது எலுமிச்சை சாற்றை உங்கள் உதடுகளில் தடவி கொள்ளுங்கள் , சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் தண்ணீரில் கழுவவும். சிறந்த முடிவுகளை பெற தினமும் இதைச் செய்து வந்தால் நல்ல பயணைபெறலாம்.
இதற்கு அடுத்தபடியாக இதனை நாம் செய்து பார்க்கலாம். சிறிது சர்க்கரையை ஒலிவ் எண்ணெய் அல்லது தேனுடன் கலந்து ஸ்க்ரப் செய்யவும். இதை உங்கள் உதடுகளில் சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்து பின் கழுவிக் கொள்ளுங்கள் உங்கள் உதடுகளை உரிக்கவும், கருமையை ஏற்படுத்தும் இறந்த சரும செல்களை அகற்றவும் உதவும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
சிறிது பீட்ரூட் சாற்றை படுக்கைக்குச் செல்வதற்கு முன் உதடுகளில் தடவி, இரவு முழுவதும் அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். காலையில் உங்கள் உதட்டை கழுவி வந்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
அடுத்த சிறந்த வழிமுறைதான் ஒரு வெள்ளரிக்காயை துண்டுகளாக சிறிய சிறிய துண்டுகலாக நறுக்கி, உதடுகளில் சில நிமிடங்கள் தேய்க்கவும். கிட்டத்தட்ட சுமார் பத்து நிமிடங்கள் அப்படியே வைத்துக்கொண்டு தண்ணீரில் கழுவி வந்தால் நல்லது.