என்னதான் முக அழகை பராமரிப்பதில் நாம் அதிகம் கவனம் செலுத்தினாலும் பாத அழகை பராமரிப்பதில் கொஞ்சம் சோம்பல் காட்டுவது நம்ம்மில் பலருக்கு உள்ள வழக்கமான பழக்கம்தான். பாதத்திற்கு கூடுதல் கவனம் கொடுக்காமையினாலேயே இந்த பித்தவெடிப்பு பிரச்சனை ஏற்படுகிறது.பாதங்களில் ஏற்படும் கிருமித்தொற்றே இதற்கு முக்கிய காரணமாகும். பாதங்களை ஒழுங்காக பராமரிக்காமல் விட்டால் நாளடைவில் அவை பெரிய உண்டு பண்ணி நம்மால் நடக்கவோ,படுக்கவோ பிரச்சனை முடியாமல் போய்விடும். பித்தவெடிப்பு குளிர்ச்சியின் காரணமாக மட்டுமின்றி வறட்சியாலும் ஏற்படும். அதேபோல் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களையும்,அதிக உடல் எடை உடையவர்களையும், நீரில் நீண்ட நேரம்
நிற்பவர்களையும்,அசுத்தமான வாழ்கை முறையினை பின்பற்றுவர்களையும் விரைவில் தாக்கி விடும். மேலும் எப்போதும் நாம் வெறும் காலில் நடப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நோய்க்கிருமிகள் எம் பாதங்களில் நுழைந்து வெடிப்புக்களை மேலும் பெரிதாக்கி விடும் ஆகவே எப்போதும் எங்கு சென்றாலும் பாதணிகளை கழற்றாமலே செல்லுங்கள்.இந்த பித்த வெடிப்பு பிரச்சனையிலிருந்து விடுபட நம் சூழலிலே இயற்கையான வைத்திய முறைகள் பல உண்டு.அவற்றை பயன்படுத்தினாலே போதும் இதிலிருந்து எளிதில் விடுதலை பெறலாம். இதோ உங்களுக்கு பித்தவெடிப்பிலிருந்து விடுதலைபெற சில டிப்ஸ்
பித்தவெடிப்புக்கு மஞ்சளும்,மருதாணியும் சிறந்ததொரு அரு மருந்தாக காணப்படுகிறது. மஞ்சள் இயற்கையாகவே பாக்டீரிய எதிர்ப்பு பொருளாகவும் அன்டிசெப்டிக் மருந்தாகவும் பயன்படும் அதேபோல் மருதாணி ஒரு குளிர்ச்சி தரக்கூடியதொன்று எனவே இவை இரண்டையும் சிறிதளவு எடுத்து சமமான அளவில் குழைத்து வெடிப்பு உள்ள இடங்களில் பற்று போட்டால் நாளடைவில் இது குணமாகி விடும் பித்த வெடிப்பிற்கு தீர்வாக சில எண்ணெய் வகைகளையும் பயன்படுத்தலாம். குறிப்பாக தேங்காய் எண்ணெய்,வேப்பெண்ணை, விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் ஒயில் என்பவற்றை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயை பித்த வெடிப்பு உள்ள பகுதிகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து குழைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி நன்கு தேய்க்கலாம் நாளடைவில் இது சரி ஆகிவிடும். எப்போதும் இரவில் படுக்க போகமுன் கால்களை கழுவி சிறிது தேங்காய் எண்ணையை தடவி கால்களுக்கு சின்ன மசாஜ் கொடுத்து படுப்பது எப்போதுமே சிறந்தது.மேலும் வேப்ப எண்ணையுடன் சிறிது மஞ்சள் கலந்து பூசலாம், அதேபோல் விளக்கெண்ணையுன் சிறிது நல்லெண்ணையும், மஞ்சளும் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் பூசலாம். அத்தோடு ஆலிவ் ஒயிலுடன் தேன் கலந்தும் வெடிப்புக்களில் பூசலாம்.
காலை,மாலை இரு வேளையும் குளிக்கின்ற போது கால்களை நன்றாக ஒரு சொரசொரப்பான கல்லால் உரஞ்சி கழுவ வேண்டும்,இல்லையெனில் அதற்கென பயன்படுத்தபடும் பிரஷ்களை கொண்டும் கால்களை சுத்தம் செய்யலாம். அத்தோடு குளித்த பின் கால்களை ஈரம் போக நன்றாக துடைக்க வேண்டும். வெடிப்புக்கள் உள்ள காலங்களில் ஒரு அகன்ற வாயினை உடைய பாத்திரத்தை எடுத்து அவற்றுக்குள் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி அவற்றுள் சிறிது கல்உப்பு,எலுமிச்சை சாறு,சிறிது மஞ்சளும் கலந்து பாதங்களை அவற்றுள் 15நிமிடங்கள் வைக்க வேண்டும்.இவ்வாறு செய்கின்ற போது வெடிப்புக்கள் மறையும்.