எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டால் நன்மைகளை போல பக்கவிளைவுகளும் உள்ளன.

அதிக எடை கொண்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்கள் தண்ணீர் விரதம் இருந்தால் பாரிய மாற்றத்தை பார்க்கலாம்.

தண்ணீர் விரதம் எடை குறைப்புக்கு காரணமாக இருக்கின்றது. மேலும் இரத்த அழுத்த அளவை ஒழுங்குபடுத்துக்கின்றது.

மாதத்திற்கு ஒருதடவை தண்ணீர் விரம் இருப்பது ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

மேலும் தண்ணீர் மட்டும் அருந்துவது இறந்த செல்களை அகற்றி, புதிய செல்கள் தோன்றுவதற்கும் வித்திடும். ஆனால், நீரிழிவு நோயாளிகள், இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த விரத்தை மேற்கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம்.

தண்ணீர் விரதத்தைக் கடைப்பிடிக்கும்போது, உடலில் டிரைகிளிசரைடு அளவுகள் குறைக்கப்படுகின்றன. இதனால் கொழுப்பின் அளவை மேம்படுத்த காரணமாக அமைகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *