தமது அழகில் மிகவும் அக்கறையுடைய பெண்கள், தனது மெனி மிருதுவாக இருக்கவேண்டும் என நினைக்கின்றனர்.

முக்கியமாக முகம், கைகள், கால்கள் என்பன மிருதுவான தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

குறித்த உரோமங்களை அகற்றுவதற்காக சந்தையில் உள்ள பல்வேறு பொருட்களை உபயோகிக்கின்றனர். இவற்றைப் பயன்படுத்தும் போது, பலருக்கு ஒவ்வாமை பலவித நோய்களும் ஏற்படுகின்றது.

இவ்வாறான சிக்கல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பணத்தை மீதப்படுத்துவதற்கும் சமயலறையிலுள்ள பொருட்களையே நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சீனி மற்றும் தேசிக்காய் கலவை

சீனியுடன் தேசிக்காய்ச் சாறு கலந்த கலவையைப் உபயோகிப்பதால் உடலில் உரோமங்களை மிக இலகுவாக அகற்றலாம்.
ஒரு மேசைக்கரண்டி சீனி மற்றும் தேசிக்காய் சாற்றை நன்றாக கலந்துகொள்ளவும். 8 தொடக்கம் 9 மேசைக்கரண்டி நீர் ஊற்றி, அவற்றை குமிழ்கள் வரும்வரை சூடாக்கவும். அதன் பின்னர், அந்தக் கலவையை உரோமங்களுள்ள பகுதிகளில். பூசவும். 20-25 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *