நகம் என்பது உடலின் அழகுக்கு மட்டும் அல்ல சருமத்தின் பாதுகாக்கவும் உதவுகின்றது.
தற்கால கட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் நகம் சொத்தை பிரச்சினை அதிகமாக காணப்படுகின்றது. இந்த பிரச்சினைகள் கால்சியம் குறைப்பாட்டினால் ஏற்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
சொத்தைக்கான முக்கிய காரணம் சில பெண்கள் வீட்டிலுள்ள வேலைகள் செய்யும் போது அதிகளவு தண்ணீரில் இருக்கின்றமை முக்கிய காரணியாகவுள்ளது.
குறித்த பிரச்சினையை தடுப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகள் நானாந்தம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உரிய மருந்து வில்லைகளை எடுத்து கொள்ள வேண்டும் முக்கியம்.
குறிப்பாக, நகங்கள் சொத்தையாக இருப்பவர்களின் காலணிகளை அணிவதால் கூட இந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது.
குடும்பத்திலுள்ள யாராவது ஒரு ஆளுக்கு பரம்பரையில் யாருக்காவது இந்த பிரச்சினை இருந்தால் நகம் சொத்தை பிரச்சினை இருக்கும். டி.என்.ஏ வழியாக கடத்தப்படுகிறது.
ஒரு நகம் இவ்வாறு காணப்படும் போது வைத்தியரை நாடுவது சிறந்தது. இல்லாவிட்டால் காலப்போக்கில் எல்லா விரல்களுக்கு இந்த நோய் பரவி விடும்.