எமது உடலில் உள்ள சர்க்கரை சத்து,நீர் சத்து மற்றும் உப்பு சத்து குறைவதால் மூட்டு வலி, கால் வலி, வருகிறது.
வாத நீர் இருந்தாலும் மூட்டு வலி வரும்.
தேவையான அளவு நீர் அருந்தி சிறுநீர் நன்கு பிரிந்தால் இந்த நோய் வருவதை தடுக்கலாம்வாத நீர் மூட்டுக்களில் உள்ள சவ்வுகளை தாக்கி வலிகளை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் முடிந்த பின்னர் கால்சியம் சத்து குறைகின்றது இதனால் முட்டு வலி ஏற்படுகின்றது.
உடல்பருமன் காரணமாக ஆண்களுக்கு உடலின் மொத்த எடையும் கால் பகுதி தாங்குவதால் எளிதில் முட்டுவலி வருகிறது.
எமது நாளாந்தம் உணவு எடுத்துக்கொண்ட பின் சரியான அளவு நீர் அருந்த வில்லையெனில் நீர் சத்து குறைவடைந்து மூட்டுகளில் வலி ஏற்பட காரணமாகின்றது.
ஒரு சிலர் சர்க்கரை சத்து கூடிவிடும் எனக்கருதி குறைவாக உணவை உண்பதால் சர்க்கரை மற்றும் உப்பு சத்து குறைந்து மூட்டு வலி ஏற்படுகிறது.
பெண்களை பொறுத்த வரை சரியான சாப்பாடு மற்றும் சரியான அளவு நீர் அருந்தாத காரணத்தினாலும்,சாப்பாட்டை நேரம் தவறி உண்பதாலும் கால் வலி,மூட்டு வலி வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.
நாம் தினமும் பயன் படுத்துகின்ற எண்ணெய்களை பயன் படுத்தி இந்த வலிகளை இலகுவாக இல்லாமல் செய்யலாம் .
எடுத்துக்ெகாள்ள வேண்டிய பெருட்களும் அளவும்
01.நல்லெண்ணெய் 100 மில்லி,கடுகு எண்ணெய் 100 மில்லி மற்றும் வேப்ப எண்ணெய் 50 மில்லி,எடுத்து கலந்து நன்றாக சூடு படுத்திக்ெகாண்டு , ஆறிய பின்னர் கட்டி சூடம் சிறிதளவு போட்டு கலந்து குறித்த எண்ணெய்யை உங்களுடைய வலி உள்ள இடத்தில் பூசிவந்தால் வலி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.
நீர் தன்மை கூடுவதால் கால் வீக்கம் ஏற்படுகிறது.உணவுக்காட்டுப்பாடு இல்லை என்றாலும்,அதிக நேரம் பேருந்து பயணத்தின் போதும் கால் வீக்கம் ஏற்படும்.கால் வீக்கம்,கால் வலி மற்றும் மூட்டு வலி ஆகியவற்றிற்கு இந்த எண்ணெய் தடவ சரியாகும்.
இந்த எண்ணெயை தொடர்ந்து 15 நாட்கள் தடவி வர வலி குறையத்தொடங்கும்,வலி குறைந்தாலும் இந்த எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் எதிர் காலத்தில் கால் வலி மற்றும் மூட்டு வலி வருவதை தடுக்கலாம்.
வாழைத்தண்டு மற்றும் அரைக்கீரையை எடுத்துக்ெகாள்வது சிறந்தது சுண்ணாம்பு சத்து அதிகம் இந்த கீரைவகைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்பதால் கால் வலி மற்றும் மூட்டு வலி வராமல் தடுக்க முடியும்.
02.தண்டுக்கீரை மற்றும் சுண்டக்கடலையில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது,இதை உணவில் அடிக்கடி சேர்த்து வர எலும்புகள் பலமடைந்து முட்டு வலிகள் குறையும்.
03.வெற்றிலை மற்றும் பாக்கை சுண்ணாம்புடன் சேர்த்து சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.
சாப்பிட்ட உடன் நீர் அருந்தக்கூடாது, சாப்பிட்டு 20நிமிடம் கழித்து 200 மில்லி மற்றும் தேவைப்படும்போது எல்லாம் தண்ணீரை உடனே அருந்த வேண்டும்.
04.நவதானிங்களை பயன்படுத்தி செய்யப்படும் தோசையை சாப்பிவதன் மூலம் எல்லா விதமான சத்துக்களும் உடலுக்கு கிடைப்பதால் கால் வலி மற்றும் மூட்டு வலி குறையும்.