வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்களில் ஆரஞ்சு பழமும் ஒன்றாகும்.இவற்றில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இவை தவிர ஆன்டி ஆக்சிடென்ட் அதிகம் நிறைந்த பழமாகவும் உள்ளது.
இவற்றில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டீன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்திருப்பதால் சூரியக் கதிர்களால் சரும செல்களில் ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதோடு,சருமத்தின் நிறத்திலும் படிப்படியாக மாற்றம் நிகழும் அத்தோடு என்றும் இளமையோடு இருக்கலாம். மேலும் உங்களுக்கு 50 வயதானாலும் இளமையான தோற்றத்தை கொடுப்பதோடு, முதுமைத்தோற்றத்துக்கு குட்பை சொல்லிவிடும். இப் பழமானது உடலில் உள்ள செல்களின் நோயெதிப்பு சக்தியை அதிகரித்து, எந்த நோய்களும் எம்மை தாக்காதவாறு பாதுகாத்து, வைரஸ் தொற்றுக்களிலிருந்தும் பாதுகாக்கிறது. எனவே நாள் ஒன்றுக்கு ஒரு ஆரஞ்சு பழத்தினை உட்க்கொள்ளும் போது நம்மில் காலப்போக்கில் நிறைய மாற்றத்தை காணலாம்.
நம்மில் பலருக்கு ஸ்லிம்மாக இருக்கவே ஆசை அப்படி ஆசைப்படுறவங்க எல்லோருமே கண்டிப்பா ஒருநாளைக்கு ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுங்க இதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் முடி உதிர்வு பிரச்சனையால் பல பேர் அவதிபடுவாங்க இவர்கள் கூட ஆரஞ்சு பழத்தை எடுக்கலாம். இதிலுள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்து, கொலஜன் புரத உற்பத்திக்கு உதவுகிறது.இதனால் முடி உதிர்வு கூட தடைபடும். நம்முடைய ஆரோக்கியத்திலும் இது பங்கு பெறுகிறது. குறிப்பாக இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது,இரத்த சோகையில் இருந்து நம்மை பாதுகாக்கிறது அத்தோடு சிறுநீரக கல்லையும் தடுக்கிறது.