இன்று உடல் எடையை குறைப்பது பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. இதனால் பலர் மனஅழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். ஒரு சிலர் ஜிம்மிலேயே தவம் கிடக்கிறார்கள்.ஒரு சிலர் டயட் என்ற பேரில் சாப்பிடாமல் பட்டினியும் கிடப்பார்கள். இதனால் பக்கவிளைவுகளேயே அதிகம் சம்பாரிப்பார்கள். என்னதான் செய்தாலும் உடல் எடை குறையவில்லையா? கடைசியாக ஒருமுறை நாம சொல்ற இந்த டிப்ஸ் ஐயும் கடைபிடிச்சு பாருங்களேன்.கண்டிப்பா உங்கள் எடையில் நல்ல மாற்றம் தெரியும். அது வேறு ஒன்றுமில்லை உங்கள் சமையல் அறையில் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஒரு வாசனை பொருள்தான். அது வேறொன்றுமில்லை கருவேப்பிலை தான். இத ஜூஸ் போட்டு குடிச்சு பாருங்க. அப்புறம் உங்கள் எடையை உங்களாலேயே நம்பமுடியாமல் இருக்கும்.
மிகுந்த வாசனையுள்ள இந்த கருவேப்பிலை நிறைய மருத்துவ பயன்களை கொண்டது. இதில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி போன்ற பல முக்கிய சத்துக்கள் உள்ளது. எப்போதும் சிலபேர் சொல்லுவாங்க நமக்கு பசி இல்லை என்று அப்படிப்பட்டவர்கள் இந்த கருவேப்பிலையை பொடியாக்கி பயன்படுத்தலாம். நாம் உண்ணும் உணவுடன் இப்பொடியை தினந்தோறும் கலந்து பயன்படுத்தலாம். மேலும் தலைமுடி பிரச்சனையை எதிர்கொள்பர்கள் கூட இதை பயன்படுத்தலாம். குறிப்பாக முடிஉதிர்வு ,இளநரை பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.
சரி நண்பர்களே உடல் எடை குறைய எவ்வாறு இதை பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். இதனை சாறு வடிவில் எடுத்து பருகலாம். இந்த கறிவேப்பிலை சாறு தயாரிக்க, முதலில் நன்கு கழுவிய கறிவேப்பிலைகளை எடுத்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து,பின்பு சிறிது நேரம் கழித்து இந்த தண்ணீரை வடிகட்டவும். குறித்த நீர் வெதுவெதுப்பாக இருக்கும் போதே குடிப்பது. மேலும் அதன் இலைகளை அரைத்து எலுமிச்சை மற்றும் தேன் கலந்து சாப்பிடலாம். கறிவேப்பிலை சாறு குடிக்கும் போது வெறும் வயிற்றில் பருக வேண்டும்.இவ்வாறு செய்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
உடல் எடை கூடிவிட்டது என்பதை நம் வயிறு மற்றும் இடுப்பிலுள்ள சதைகள் சற்று பெரிதாகவே காணப்படும். இவற்றை சுற்றியுள்ள கொழுப்பை சரி செய்ய கறிவேப்பிலையை உட்கொள்ளலாம். இதிலுள்ள ஆல்கலாய்டுகள் கொழுப்பைக் குறைக்க உதவும். இதன் சாற்றை குடித்தால், கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவு குறைவதுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்.