எமது புத்தண்டு ஏனைய பண்டிகைகள், விழா காலங்கள் என்றாலும் முதலில் இனிப்பு வகை பலகாரங்கள் தான் முதன்மை இடத்தை பிடிக்கின்றது.

எமது வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இனிப்பு காணப்படுகின்றது.

இந்த இனிப்பு உணவுகளை அளவோடு எடுத்து கொள்வதே சிறந்தது. இல்லை என்றால் பல்வேறுவகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

தற்போது அதிகமாக இனிப்பு உணவுகள் அதிகம் எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் இங்கு பார்ப்போம்.

01, எமது உடல் எடை அதிகரிப்புக்கு அதிக இனிப்பு சாப்படுகள் காரணமாகின்றது.

02.குறிப்பாக சர்க்கரை நிறைந்த பானங்கள் என்பன ஆனால் அதிக எடை , நீரிழிவு அபாயம், எலும்பு முறிவுகள் மேலும் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

03. மேலும் பற்களில் சிதைவு என்பது உண்டாகும். சர்க்கரை பற்களில் குழிவையோ சிதைவையோ நேரடியாக உண்டக்காது. ஆனாலும் பற்களின் மேற்பரப்பில் இனிப்புகளின் துகள்கள் படியும் போது எமது பல்களில் முன்பதாக அங்கிருக்கும் கழிவுகள் இதனோடு இணைந்து பற்களின் குழிவை துவாரங்களை உண்டாக்கும்.

04.சர்க்கரை சேர்த்த உணவுகள் சரும ஆரோக்கியத்தில் சிக்கல்களை உண்டாக்கும்.

05.எமது நாளாந்த உணவில் அதிக இனிப்பு சேர்க்கும் போதுஅதற்கு தேவையான இன்சுலின் அளவும் தேவைப்படுகின்றது.அதிக இனிப்பு அதிக இன்சுலின் சுரப்பை வேண்டும் அல்லது இன்சுலின் எதிர்ப்புதிறனை கொண்டிருக்கவும் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள் உடலில் அழற்சியை உண்டாக்க முடியும். பதட்டம், மன அழுத்தம், மன சோர்வையும் அதிகரிக்க வாய்ப்பான அமைகின்றது.

06.இதய நோய் அபாயத்தை சர்க்கரை சேர்த்த உணவுகள் அதிவேகமாக கூடுகின்றது. சர்க்கரை, சோடாசேர்க்கப்பட்ட பானங்களை தவறாமல் எடுத்துகொண்டவர்கள். அதிக இனிப்பு இதயத்தையும் பதம் பார்க்க கூடும்.

07.கல்லீரலுக்கு பாதிப்பை சக்கரை கலந்த உணவுகள் ஏற்படுத்துகின்றது. அதிக இனிப்பு உணவாக எடுத்துக்காள்ளும் போது அது ரத்த ஓட்டத்திற்கும், கல்லீரலுக்கும் இடையில் அதிகமாகிறது.

08. சர்க்கரை நிறைந்த உணவுகள் நமது குறுகிய மற்றும் நீண்ட கால நினைவுகளை நாம் தக்கவைத்துகொள்ளும் மூளை திறனை நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *