நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகரித்த வெப்பம் காரணமாக பலருக்கு நபர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் தங்களது ஆரோக்கியத்தை இழந்து தவிக்கின்றனர்.

இந்த நிலைகாரணமாக சளி, இருமல், வைரஸ் காய்ச்சல், ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இவை ஏற்படுவதற்கு முக்கிய காரணமே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதேமுக்கிய காரணம்.

இந்த நிலையை சமாளிக்க நோய் எதிர்ப்பு சக்தியினை தக்க வைத்துக்கொள்ளும் சில பழ வகைகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வானிலை மாற்றத்தினை சமாளிக்கும் பழங்கள் நாம் பார்க்கலாம்
முதலாவதாக ஆரஞ்சு பழம் – அதிக வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள ஆரஞ்சு பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

இரண்டாவதாக செர்ரி – இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தி ஆற்றலை அதிகரிக்க செர்ரி பழங்கள் உதவுகின்றது.

மூன்றாவதாக ஸ்ட்ராபெர்ரி – ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ள பழகமாக ஸ்ட்ராபெர்ரி இருப்பதால், இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

நான்காவதாக பப்பாளி பழம் – பல வைட்டமின்களைக் கொண்டுள்ள பப்பாளி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

அடுத்ததாக பிளாக்பெரி – கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்திருக்கும் பழமாக பிளாக்பெரி காணப்படுகின்றது.

 

By Health

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *