பொதுவாக காய்கறிகளில் அதிகளவான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் பாகற்காயை எடுத்துக்கொண்டால், அதில் ஏராளமான சத்துக்கள் பல்வேறுவகையான நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
தற்போது எமது உணவில் பாகற்காயுடன் சேர்த்து அல்லது பாகற்காயை உண்டபின்னர் உண்ணக் கூடாத சில உணவுப் பொருட்களும் இருக்கத்தான் செய்கின்றன.
அது எவ்வாறான பொருள் என்று பார்ப்போம். (பாகற்காயுடன் உண்ணக்கூடாதவை)
வெண்டைக்காய்
பாகற்காயுடன் வெண்டைக்காயை சாப்பிடும் போது வாயிறு சம்மந்தமான நோய்களை ஏற்படுத்திவிடும் வெண்டிக்காய் மிகவும் சத்து மிகுந்த ஒரு காய்கறி என்றபோதிலும் அதை இரண்டையும் சாப்பிடும் போது சிக்கல் ஏற்படுகின்றது.
பால்
பால் மற்றும் பாகற்காய் சாப்பிட்டால் அது மலச்சிக்கல், வயிறு எரிச்சல் மற்றும் வலியை ஏற்படுத்தும்.
மாம்பழம்
மாம்பழத்தை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது நெஞ்செரிச்சல், குமட்டல்அமிலத்தன்மை போன்ற ஜீரண பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
முள்ளங்கி
முள்ளங்கி மற்றும் பாகற்காயின் தாக்கமானது, தொண்டையில் அமிலத்தன்மை மற்றும் சளி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வழி வகுக்கும்.
தயிர்
தயிரை சேர்த்து பாகற்காய் உண்ணும்போது அது பல வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கு காரணமாக அமையும்.