வெங்காயத்தில் முகம் பளபளக்க……..
உங்கள் முகம் பொலிவு இழந்து கருப்பாக இருக்கிறதா? ஒரேயொரு வாரத்தில் இழந்த பொலிவை மறுபடியும் பெற்று பளிச்சென்று மின்ன வேண்டுமா? அதற்கு ஒரு வெங்காயத்துடன் இந்த மூன்று பொருட்களை சேர்த்து முகத்தில் தடவினால் போதும் முகம் மின்னும். இதனை முயற்சி செய்து தான் பாருங்களேன்….. தொடர்ந்து பதிவைப் படித்து பாருங்கள்…
தேவையான பொருட்கள் :- பெரிய வெங்காயம் ஒன்று, சோள மாவு (corn flour) ஒரு ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன், கற்றாழை ஜெல் இரண்டு ஸ்பூன்.
செய்முறை:-
முதலில் வெங்காயத்தை தோல் உரித்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அதனை சிறு துண்டுகளாக வெட்டவும். தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து எடுக்கவும். அதனை வடிகட்டி சாரை தனியாக எடுத்து கொள்ளவும். தனியாக எடுத்து வைத்திருக்கும் வெங்காய சாற்றுடன் ஒரு ஸ்பூன் சோள மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் அதனை கடாய்(pan) ஒன்றிற்கு மாற்றி மெல்லிய தனலில் (low flame) வற்றும் வரை கிளறவும். அதாவது ஒரு கிறிம் பதத்திற்கு வரும் வரை கை விடாமல் கிளறவும்.( கிளறாமல் விட்டால் அடி பிடிக்கும்). பின்னர் கிளறிய கிறிமை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து அனைத்தையும் 5-7 நிமிடங்கள் வரை ஒரு ஸ்பூனால் நன்கு கலந்து கொள்ளவும். ஒரு ஜாடியில் சேமித்து வைத்துக் கொண்டு வேண்டிய நேரத்தில் உபயோகிக்கலாம்..
இனி அதனை எவ்வாறு apply பண்ணலாம் என்று பார்ப்போம்…
முதலில் உங்கள் முகத்தை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் துடைத்து கொள்ளவும். பின்னர் செய்து வைத்திருக்கும் கிறிமை கை விரலினால் தொட்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் சிறு சிறு புள்ளிகளாக வைக்கவும். பின் மெதுவாக கீழிருந்து மேலாக 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவி வர உங்கள் முகத்தின் வித்தியாசம் உங்களுக்கே தெரிய ஆரம்பித்தது விடும். தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் பளிச்சென்று மின்ன தொடங்கி விடும்.இதனை தொடர்ந்து செய்து பலன் பெறுவீர்கள் என நம்புகிறேன்..