இன்று உள்ள பெண்கள் கை,கால்,முகம் என வெளிப்புற அழகிற்கு ஒவ்வொரு விடயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்களது உட்ப்புற அழகில் கவனம் செலுத்துவதில்லை என்றே கூறலாம். நாம் மறைவான இடங்களிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் நம் அழகிற்கு மட்டுமல்ல நம் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததே ஆகும்.
சிலருக்கு அக்குள் பகுதி கறுப்பாக இருக்கும். குறிப்பாகஇன்று பெண்கள் பலர் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அதிகம் அணிவதாலும், கை குட்டையான ஆடைகளை அணிவதாலும் அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. இவை அழகாக இருக்கும் போது தான் மற்றவர்கள் நம்மை பார்த்து முகம் சுளிக்கமாட்டார்கள்.
சரி நண்பர்களே கவலையை விடுங்க அக்குள் பகுதி கருப்பாக இருக்கக்கூடாதெனில், அவ்விடத்தில் சரியான பராமரிப்பை அவ்வப்போது கொடுக்க வேண்டியது நம்மளோட கடமை. எனவே அக்குள் கருமையை போக்க என்ன செய்யலாம் என்று பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
முதலாவதாக பேக்கிங் சோடா பற்றி பார்க்கலாம். உங்கள் அக்குள் கருமையைப் போக்க பேக்கிங் சோடா உதவும். இது ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயற்பட கூடியது. முதலில் நீங்கள் பேக்கிங் சோடாவுடன், நீர் சேர்த்து பேஸ்ட் போல அதனை செய்து அக்குள்களில் பூசி உலர விட்டு, பின்னர் ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். இவற்றை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அத்தோடு அக்குளில் இருந்து வெளிவரும் துர்நாற்றமும் நீங்கும். மேலும் பேக்கிங் சோடாவுடன், ரோஸ் வாட்டர் கலந்து கூட அங்குள்களில் பூசலாம். இவை கூட நல்ல விரைவில் கருமை நீங்க பலன் தரும்.
அடுத்து எலுமிச்சை இதில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை உள்ளதால்.இதையும் அக்குள் கருமையை போக்க பயன்படுத்தலாம். எதையும் அளவோடு பயன்படுத்துவது நல்லது இதையும் அளவாகவே பயன்படுத்துங்கள்.அளவுக்கு அதிகமானால் இவ் எலுமிச்சைசாறு சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எலுமிச்சை சாறு, தயிர், தேன், மஞ்சள் தூள் ஆகிய இந்த நான்கையும் சம அளவு கலந்து பேஸ்ட் போல அக்குள் பகுதியில் பூசி உலர விட்டு விடுங்கள். இவை காய்ந்ததும் ஈரத்துணியை வைத்து துடைத்து எடுத்து விடுங்கள். இவ்வாறு செய்தாலும் உங்கள் அக்குள் கருமை ரொம்ப சீக்கிரமாகவே மறைய தொடங்கிவிடும். அத்தோடு வாரத்திற்கு 4 நாட்கள் அரை எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை கடலை மாவில் தொட்டு நன்கு ஸ்க்ரப் செய்யவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கூட கருமை மறைந்துவிடும்.
அடுத்து தேங்காய் எண்ணெய் தினமும் உறங்குவதற்கு முன் உங்கள் அக்குள்களில் தேங்காய் எண்ணையை பூசி காலையில் எழுந்ததும் நன்கு கழுவ வேண்டும். இல்லாவிடின் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் சர்க்கரை சேர்த்து அக்குளில் நன்கு ஸ்க்ரப் செய்து பின் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் தேங்காய் எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு மற்றும் தயிர் கலந்தாலே இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.இவற்றை சேர்த்து கலந்து பூசலாம்.