இளமையில் நரை விழுந்து விட்டால் சிலருக்கு வாழ்கையே முடிந்து விட்டது போல் பீல் பண்ணுவாங்க. இதனால் மன உளைச்சலுக்கும் ஆளாகுறாங்க. இத்தகைய நரைமுடிகள் வந்தாலே நம்மள வயதானவர் போல மத்தவங்க நினச்சுவாங்களே என்று எண்ணி கொஞ்சம் கவலையாவே இருப்பாங்க. எல்லாவற்றுக்கும் கட்டாயம் தீர்வு உண்டு நண்பர்களே
இந்த நரை முடி பிரச்சினைக்கு பல காரணங்கள் உண்டு இவை மரபு ரீதியாகவும் வரலாம். அத்தோடு உடலில் சத்து குறைபாடு காரணமாகவும் வரலாம். மெலனின் எனும் நிறமிதான் நம் தோலின் நிறத்தை நிர்ணயம் செய்கிறது. இதைப் போன்றே யூமெலனின், பயோ மெலனின் ஆகிய நிறமிகள் தான் நமது முடியின் கருமைக்கு காரணமாகின்றது. எனவே இந்த நிறமிகளின் உற்பத்திக் குறைவதால், கருமையான முடிகள் நரைமுடிகளாக மாறுகின்றன.
சரி நண்பர்களே என்னதான் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றுக்கு கண்டிப்பா தீர்வு உண்டு.அது போல இந்த நரை முடி பிரச்சனைக்கு இன்று முதல் இந்த டயட்ட பலோ பண்ணுங்க கண்டிப்பா உங்க நரை முடிக்கு குட்பை சொல்லுங்க
சிக்கன்
அசைவ உணவுகளுள் கூடுதலாக எல்லோரும் விரும்பி சாப்பிடகூடிய ஒர் உணவு எப்பவுமே ஆரோக்கியமான கூந்தலுக்கு வைட்டமின் பி12 தேவை. இதற்கு கோழிக்கறியுடன் முட்டை, பால், சீஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
கொண்டைக்கடலை
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் இந்த கொண்டைக்கடலையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உண்டு. இவற்றை பொதுவாக சுண்டல்,கறி செய்து சாப்பிடலாம்.கொண்டைக்கடலையில் வைட்டமின் பி9 நிறைந்துள்ளது. ஒரு கப் கொண்டைக்கடலையில் 1114 மைக்ரோகிராம் வைட்டமின் பி-9 உள்ளது, இது தினசரி தேவையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.
ஸ்பைருலினா
குறைந்த கலோரி உணவை உட்கொள்பவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இவ் உணவு பரிந்துரைக்கப்படுகிறது. இது நம் முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் பொடி பொதுவாக உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
பருப்பு
தினமும் உண்ணும் பருப்புகளில் வைட்டமின் பி9 நிறைந்துள்ளது. வைட்டமின் பி12 போன்று, பி9 டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ உற்பத்திக்கு உதவுகிறது. இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் அவசியமானது மற்றும் முடியின் கருப்பு நிறத்தை பராமரிக்க முக்கியமான அமினோ அமிலமான மெத்தியோனைன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.