பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. அந்த அளவுக்கு மிளகு ஒரு நஞ்சு முறிப்பானாக செயல்படக்கூடியது. நம் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடிய இந்த மிளகுல கல்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், ஈமோகுளோபின், விட்டமின்களும் கொண்டதாக இருக்கிறது. மிளகு கருப்பாகவும், அதிக கார தன்மையும் உடையதால் அதிகமானவர்கள் உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. ஆனால் மிளகை தங்கபஸ்பம் என்று சொல்லுவார்கள். அந்த அளவுக்கு பல வகையான நன்மைகளை தரக்கூடிய இந்த மிளகு. உடல் நலத்திற்கு என்னென்ன நன்மைகளை தருகிறது என்பதை பற்றி கீழே பதிவின் மூலம் பார்ப்போம். பதிவினை படித்து நீங்களும் நன்மை பெற வேண்டும்.
1) சளி, இருமல், ஞாபகமறதி, உடல் சோர்வு நீங்க…….
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி இருமல் தொந்தரவு விடாமல் துரத்தும் மிக பெரிய நோய் ஆகும். எப்படி பட்ட மருந்து கொடுத்தாலும் சரி ஆகவில்லையா?.. பெரியவர்களுக்கு…. ஞாபகமறதி….! ஞாபகமறதி கொல்லுகிறதா? எந்த பொருளை எங்கு வைத்தோம் என்றுகூட நினைவு இல்லாமல் வருந்துகின்றீரா? ஆண் பெண் இருபாலரும் உடல் சோர்வா? எந்த வேலையையும் சரி வர செய்ய முடிய வில்லையா? அதற்காக தீர்வு இதோ….
மிளகுத்தூள் ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டு பாருங்கள்… சளி இருமல் ஞாபகமறதி உடல் சோர்வை எல்லாம் இரண்டே நாட்களில் பறந்து போய் விடும்.
2) அஜீரண தொல்லை நீங்க….
அதிகமானோரின் பிரச்சினை இது தான். சாப்பிட்டு சிறிது நேரத்தில் உணவு செரிக்கவில்லை , வாயுத்தொல்லை என்று அவதிப்படுகிறீர்களா? ஆம் அதற்காக எளிய முறையிலான வைத்தியம் இது….
சிறிதளவு மிளகுத்தூள் எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால் அஜீரணம், செரியாமை, வாயுத்தொல்லை அனைத்தும் உங்களுக்கு பை பை சொல்லி ஓடோடி விடும்.
3) பொடுகு நீங்கி முடி வளர…
பொதுவாக ஆண் பெண் இருபாலரும் தலையில் பொடுகு என்பது ஒரு மிக பெரிய பிரச்சினை ஆகும். முடி வளரவே இல்லையா, எந்த ஷாம்பு போட்டாலும் முடி கொட்டுகிறதா? பொடுகும் குறையவில்லையா? இதனை யாரிடமும் சொல்லவும் முடியவில்லையா? இதற்காக தீர்வு….
மிளகு ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனை பால் சேர்த்து நன்கு மையாக அரைத்து கொள்ளவும் பிறகு அதனை தலையின் வேர் பகுதியில் அதாவது மண்டை பகுதியில் படும்படி தேய்த்து 10-15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும் பிறகு 20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் குளித்து வந்தால் பொடுகு பிரச்சினை நீங்கி முடி நன்றாக வளரும். நீங்கள் முயற்சி செய்து கமண்ட் பண்ணுங்க…..