ரொம்ப நாளாக நெஞ்சில் கட்டியிருக்கும் சளி.. அதாவது 15 நாட்களுக்கு மேலாக இறுக்கமாக கட்டியிருக்கும் சளியை எப்படி மலம் வழியாக சுலபமாக வெளியேற்றுவது என்பது பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க போகிறோம் .
இந்த கசாயமானது ரொம்பவும் பவர்ஃபுல் ஆனது. எவ்வளவு நாள் நெஞ்சிலே சளி கட்டியிருந்தாலும், மண்டையில் நீர் கோர்த்து இருந்தாலும் , அதிகமான இருமல் இருந்தாலும் இந்த கசாயத்தை இரண்டு நாட்கள் மட்டும் குடித்து பாருங்கள். கண்டிப்பாக உடம்பில் உள்ள மொத்த சளியும் கரைந்து மலம் வழியே வெளியேறும். அடுத்ததாக அந்த கசாயத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம். தொடர்ந்து பதிவினை படியுங்கள்..
கசாயம் செய்ய தேவையான பொருட்கள் :- 1) கற்பூரவள்ளி இலை:- 4 ( இது சளிக்கு மிகவும் நல்லது).2) பூண்டு:- ஒரு பல்.3) கிராம்பு :- 2. 4)ஏலக்காய்:- 1. 5) மிளகு:- 10. 6) சீரகம் அரை டீஸ்பூன் ( இது அஜீரணத்தை சரி செய்யும்.7) இஞ்சி ஒரு சிறிய துண்டு.
செய்முறை -:
முதலில் ஒரு மிக்சி ஜார் ஒன்றை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் மிக்சி ஜாரில் சேர்த்து முதலில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். ஓரளவுக்கு அரைந்ததும் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைக்கவும். அது ரொம்பவும் நன்றாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்று பாதியாக அரைத்தால் போதுமானது. பிறகு அரைத்த கலவையை ஒரு பாத்திரத்திற்கு ஊற்றவும். மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். இந்த அளவானது பெரியவர்கள் இரண்டு பேர் தாராளமாக குடிக்கலாம். ஒருவர் குடிக்க வேண்டும் எனில் இதில் பாதி அளவினை எடுக்கவும்.
இதே குழந்தைகளுக்கு எனின் பாதியில் கால்வாசி அளவு சேர்க்க வேண்டும். ஏனெனில் இந்த கசாயம் மிகவும் காரமாக இருக்கும் என்பதனால் குழந்தைகளுக்கு கொஞ்சமாகக் கொடுக்க வேண்டும். இப்பொழுது அரைத்த கலவையை கொண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து கூடிய தனலில் இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு அடுப்பை குறைத்து ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். அதனுடன் சிறிதளவு மஞ்சள் பொடியை சேர்த்து தண்ணீர் ஒரு டம்ளர் அளவு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். இதனை மூடி வைக்கவும்.
வெதுவெதுப்பாக வந்தவுடன் வடிகட்டி ஒரு டம்ளர்க்கு ஊற்றி குடிக்கலாம். தேவையென்றால் தேன் கலந்து குடிக்கலாம். இதனால் காரம் தெரியாமல் இருக்கும். இதனை இரவு படுக்கும் முன் குடிக்கவும்.. இந்த கசாயத்தை குடித்த பிறகு எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தொடர்ந்து இரண்டு நாட்கள் குடித்து வந்தால் தொடர் சளி கரைந்து உங்களை விட்டு ஓடிவிடும்.