தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் பிரபு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவாஜிக்கு பிறகு நடிகர் பிரபு அந்த பெயரை காப்பாற்றிவந்தார்.இவர் தமிழ் சினிமாவின் நடிக்க ஆரம்பித்த காலப்பகுதயில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.
இன்று வரையில் சினிமாவில் தனக்கான ஒரு பாதையில் பயணித்துவருகின்றார். தற்போது சிறந்த கதை மற்றும் கதாபாத்திரங்களுக்கு முக்கியதுவம் கொடுத்து நடித்துவருகின்றார்.
இந்த நிலையில், நடிகர் பிரபு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே வைத்தியசாயில் சிறுநீரக பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். “ பிரபுவிற்கு கல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனை நேற்று மாலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினோம். தொடர்ந்து இவர் இருதினங்களுக்கு பின்னர் வைத்தியசாலையில் இருந்து வௌியாகுவார் ” என தெரிவித்துள்ளார்.
சினிமா ரசிகர்கள் பிரபுவின் உடல் நிலை சரியாக இறைவனை பிராத்திக்கிறோம் என சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.