பெங்களூருவில் நடந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2- வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி அபார வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 325 ரன்களை எடுத்தது. பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர் விளாசிய வீரர்கள் யார் யார் தெரியுமா?- விரிவான தகவல்!
தொடர்ந்து 2வது சதம் விளாசினார் ஸ்மிரிதி மந்தனா!
மகளிர் கிரிக்கெட்டில் தொடர்ந்து 2வது சதம் விளாசி இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அசத்தினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 120 பந்துகளில் 136 ரன்களை எடுத்தார்.
ராகவா லாரன்ஸுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா! (வைரலாகும் காணொளி)
மிதாலி ராஜ் சாதனையை சமன் செய்தார் ஸ்மிரிதி மந்தனா!
ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்காக அதிகம் சதம் அடித்த மிதாலி ராஜ் சாதனையை சமன் செய்தார் ஸ்மிரிதி மந்தனா. மிதாலி ராஜ் மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் 7 சதங்களை அடித்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 2 சதம் அடித்த முதல் ஆசிய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.