கேட்க கேட்க தெவிக்காத பாடல்களை பாடி இசையமுது படைத்த கலைஞர் ஒருவர் அரிய செவித்திறன் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார். யார் அந்த கலைஞர்? என்ன நடந்தது? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
ராகவா லாரன்ஸுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா! (வைரலாகும் காணொளி)
திரை ரசிகர்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ‘Ek Do Teen’ எனத் தொடங்கும் இந்தி பாடல்களைக் கேட்காதவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது. இந்த மெகா ஹிட் துள்ளல் பாடல்களைப் பாடியவர் பாடகி அல்கா யாக்னிக்.
பாலிவுட்டில் அதிக தனி பாடல்களை பாடிய பாடகி என்ற புகழுக்கு சொந்தக்காரர் அல்கா யாக்னிக். தமிழ் திரையுலக இசையிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார் அல்கா யாக்னிக். ‘ஓரம் போ’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவான ‘இது என்ன மாயம்’ என்ற பாடல் ஒலித்தது இவரது குரலில் தான். 58 வயதான அல்கா யாக்னிக், குஜராத் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த இவர் 6 வயதிலேயே ஆல் இந்தியா ரேடியோவில் பஜனைப் பாடல்களைப் பாடியவர். இசை மீதான தீரா காதலில் பாடகியாகவே ஆகியவர் அல்கா யாக்னிக். 25 மொழிகளில் 1,000 திரைப்படங்களுக்கும் மேல் 21,000 பாடல்களை ரசிகர்களை தனது தேன்குரலால் மயக்கியவர் அல்கா யாக்னிக். 2 தேசிய விருதுகள், 7 ஃபிலிம் ஃபேர் என பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
2022- ஆம் ஆண்டு 15.3 பில்லியன் யூடியூப் பார்வையாளர்களைப் பெற்று உலகில் அதிகம் பேரால் கேட்கப்பட்ட பாடகர் என்று அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் சாதனையைப் படைத்தவர். தான் பாடிய பாடல்களைக் கேட்டு சிலாகித்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் ஸ்டேட்மென்ட் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பாடகி அல்கா யாக்னிக்.
தமிழக அரசுக்கு நடிகர் விஜய் வலியுறுத்தல்!
அந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் பதறிப்போய் இருக்கிறார்கள். வைரஸ் தாக்குதல்களால் செவிகளில் அரிதான உணர்த்திறன் நரம்பு பாதிக்கப்பட்டு, கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். ஹெட்போன்களில் மிகவும் சத்தமாக இசையைக் கேட்பதைத் தவிர்த்து எச்சரிக்கையாக இருக்குமாறு தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். உங்கள் அனைவரின் அன்புடன் மீண்டு வருவேன் என்று பாடகி அல்கா யாக்னிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.