மனைவிக்காகக் களத்தில் இறங்கிய நடிகர் பிரேம்ஜி!

 

பாடகர், இசையமைப்பாளர், நடிகர் எனப் பன்முகத் திறமைக் கொண்டவர் நடிகர் பிரேம்ஜி. இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகன் ஆவார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வங்கியில் பணிபுரியும் ஊழியரான இந்துவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

செவித்திறன் இழந்த தேன்குரல் நாயகி!- யார் தெரியுமா?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் பிரேம்ஜி- இந்து தம்பதியின் திருமணம், குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பிரேம்ஜி- இந்து தம்பதியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

 

பின்னர், இசையமைப்பாளரும், தனது பெரியப்பாவுமான இளையராஜாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த பிரேம்ஜி- இந்து ஜோடி ஆசி வாங்கினர்.

சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா….வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா அணி!

இந்த நிலையில், தனது அன்பு மனைவிக்காக நடிகர் பிரேம்ஜி, சமையல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் பிரேம்ஜியின் மனைவி இந்து, இதை விட வேறு என்ன எனக்கு வேண்டும்? என்று உற்சாகம் பொங்கப் பதிவிட்டுள்ளார்.