“அவர் இல்லையென்றால் சச்சின் உலகக்கோப்பையைக் கையில் ஏந்திருக்கமாட்டார்”- கனடா கிரிக்கெட் வீரர் கருத்து!

"அவர் இல்லையென்றால் சச்சின் உலகக்கோப்பையைக் கையில் ஏந்திருக்கமாட்டார்"- கனடா கிரிக்கெட் வீரர் கருத்து!

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்றழைக்கப்படும் ஐ.சி.சி.யின் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர், அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, சிறப்பாக விளையாடி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. குறிப்பாக, இந்த உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியில் கூட இந்திய தோல்வி அடையாமல் மிகச்சிறப்பாக விளையாடியது.

ராகவா லாரன்ஸுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா! (வைரலாகும் காணொளி)

இதனால் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

"அவர் இல்லையென்றால் சச்சின் உலகக்கோப்பையைக் கையில் ஏந்திருக்கமாட்டார்"- கனடா கிரிக்கெட் வீரர் கருத்து!

இந்திய கிரிக்கெட் அணி குறித்து அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இலங்கை உள்ளிட்ட அணிகளில் உள்ள வீரர்கள் கருத்துகளையும், நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கனடா அணியின் வீரர் ஆரோன் ஜான்சன், “தோனி இந்திய கிரிக்கெட்டையே மாற்றியவர்; இளம் படையைக் கொண்டு ஒருநாள் போட்டிக்கான ஐ.சி.சி.யின் உலகக்கோப்பையை வென்றுள்ளார். தோனி இல்லையென்றால் சச்சின் உலகக்கோப்பையை கையில் ஏந்திருக்கமாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

"அவர் இல்லையென்றால் சச்சின் உலகக்கோப்பையைக் கையில் ஏந்திருக்கமாட்டார்"- கனடா கிரிக்கெட் வீரர் கருத்து!

சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா….வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா அணி!

கிரிக்கெட் வீரர் ஆரோன் ஜான்சனின் இத்தகைய கருத்துக்கு தோனியின் ரசிகர்கள், ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அத்துடன், சச்சின் உலகக்கோப்பையைக் கையில் ஏந்தி மைதானத்தில் வலம் வருவது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.