நேரில் ஆறுதல் கூறிய விஜய்…கமெண்ட் செய்த அனிதா சம்பத்…வறுத்தெடுத்த ரசிகர்கள்!

 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் சுமார் 51 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 100- க்கும் மேற்பட்டோர் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்- நடிகர் சூர்யா அறிக்கை!

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

 

விஜய்யின் செயலை மறைமுகமாக விமர்சித்துள்ள நிகழ்ச்சி தொகுப்பாளரும், செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத், “நாட்டுக்காக போராட பார்டருக்கு போனப்போ, தீவிரவாதிகள நேருக்கு நேர் தாக்கும் போது, நெஞ்சுல குண்டுப்பட்டு ஹாஸ்ப்பிட்டல கவலைக்கிடமா இருக்காங்க பாவம்” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

“காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது”- ஜி.வி.பிரகாஷ் குமார் ட்வீட்!

அனிதா சம்பத்தின் கருத்து எதிராக விஜய் ரசிகர்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.