கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதிச் செய்த இந்திய அணி!

கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதிச் செய்த இந்திய அணி!

 

வங்கதேச அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதிச் செய்துள்ளது இந்திய அணி.

ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்- நடிகர் சூர்யா அறிக்கை!

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டி ஆன்டிகுவா பர்புடாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. வங்கதேச அணியை எதிர்கொண்ட இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடியது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை எடுத்தது.

 

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 50, விராட் கோலி 37, ரிஷப் பண்ட் 36, ஷிவம் துபே 34 ரன்களை எடுத்தனர். வங்கதேசம் அணி தரப்பில் ஹசன் ஷகீப், ரிஷத் ஹொசைன் தலா 2, ஷகீப் அல் ஹசன் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

பின்னர் ஆடிய வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை எடுத்து தோல்வியுற்றது. இந்திய அணியில் குல்தீப் 3, அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

நேரில் ஆறுதல் கூறிய விஜய்…கமெண்ட் செய்த அனிதா சம்பத்…வறுத்தெடுத்த ரசிகர்கள்!

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் இந்திய அணி, சூப்பர் 8 சுற்றில் வங்கதேசம் அணியை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதி வாய்ப்பைக் கிட்டத்தட்ட உறுதிச் செய்துள்ளது.