ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தந்த ஆப்கானிஸ்தான் அணி…..சாதனை படைத்த கம்மின்ஸ்!

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தந்த ஆப்கானிஸ்தான் அணி.....சாதனை படைத்த கம்மின்ஸ்!

 

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளது.

“தைரியமா இருங்க…நான் இருக்கன்…”- நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 போட்டி, கிங்ஸ்டவுனில் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா அணி, 149 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நிலையில், 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

 

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் குல்பதீன் நைப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக குர்பாஸ் 60, இப்ராஹிம் ஸ்த்ரான் 51 ரன்கள் சேர்த்தனர்.

தொடர்ந்து 2ஆவது முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்திய பேட் கம்மின்ஸ்!

ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து 2ஆவது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். முந்தைய போட்டியில் வங்கதேசத்துடன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பேட் கம்மின்ஸ் இன்று ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதிச் செய்த இந்திய அணி!

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இருமுறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.