“தைரியமா இருங்க…நான் இருக்கன்…”- நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!

"தைரியமா இருங்க...நான் இருக்கன்..."- நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!

 

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அர்ஷ்தீப் சிங், பும்ராவின் அதிரடியான பந்துவீச்சு…..அபார வெற்றி பெற்ற இந்திய அணி!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, பாதிக்கப்பட்டவரின் உறவினரான பெண் ஒருவர், விஜய்யின் காலில் விழ முயன்றார். அவரைத் தடுத்த விஜய் அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

விஷச்சாராய உயிரிழப்புகள்- தமிழ்நாடு அரசுக்கு நடிகர் விஷால் கோரிக்கை!

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தனது கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக, கள்ளச்சாராய மரணங்கள், அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தைக் காட்டுவதாக அவர் அறிக்கை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.