அர்ஷ்தீப் சிங், பும்ராவின் அதிரடியான பந்துவீச்சு…..அபார வெற்றி பெற்ற இந்திய அணி!

அர்ஷ்தீப் சிங், பும்ராவின் அதிரடியான பந்துவீச்சு.....அபார வெற்றி பெற்ற இந்திய அணி!

 

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

மனைவிக்காகக் களத்தில் இறங்கிய நடிகர் பிரேம்ஜி!

பார்படாஸில் நடத்த சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53, ஹர்திக் பாண்டியா 32, விராட் கோலி 24, ரிஷப் பந்த் 20 ரன்களை அடித்தனர்.

 

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ஒமர்சாய் 26, நஜிபுல்லா சத்ரான் 19, குல்பதின் நைப் 17 ரன்களை எடுத்தனர்.

“காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது”- ஜி.வி.பிரகாஷ் குமார் ட்வீட்!

இந்திய அணி தரப்பில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.