“பதிலாக அமைந்தது ‘மகாராஜா’ திரைப்படம்”- நடிகர் விஜய் சேதுபதி பெருமிதம்!

"பதிலாக அமைந்தது 'மகாராஜா' திரைப்படம்"- நடிகர் விஜய் சேதுபதி பெருமிதம்!

 

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவான 50- வது திரைப்படமான ‘மகாராஜா’ திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்ததுடன், படம் எடுக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர்.

விஷச்சாராய உயிரிழப்புகள்- தமிழ்நாடு அரசுக்கு நடிகர் விஷால் கோரிக்கை!

அப்போது பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “நல்ல பிரியாணி, மதிய வேளை, எப்படி தூங்காம கேட்கறீங்கனு தெரில, முதல்ல அதற்கு ரொம்ப நன்றி. இந்த படத்தைக் கேட்கும் போது பெரிய பிரமிப்பும், நம்பிக்கையும் இருந்தது. இது எப்படி சாத்தியமாக போகுது அப்படினு ஒவ்வொரு படத்திற்கு முன்னாடியும் ஒரு பெரிய கேள்வி எழுந்தது. கதையைக் கேட்கும் போது அட்ராக்ஷன் பாய்ண்ட்ஸ் தெரியும்; நடிக்கும் போது தெரியாது.

 

இந்த படத்துல ஓரளவு நம்பிக்கையோட தான் இருந்தோம். தயாரிப்பாளருக்கு போட்ட காசு எடுத்துக் கொடுத்திடும் என்ற நம்பிக்கையில இருந்தோம். நம்ம சுத்தி இருந்தவங்க தான் கேள்வியும் கேட்டாங்க…பதிலும் சொன்னாங்க. அந்த பதிலா மகாராஜா திரைப்படம் அமைஞ்சிருக்கு. நித்திலம் சாருக்கு நன்றி.

மனைவிக்காகக் களத்தில் இறங்கிய நடிகர் பிரேம்ஜி!

நீங்க படம் பாத்து முடிச்சி அன்னைக்கு நடந்த பிரஸ்மீட்ல கேள்விலாம் கேட்டு உள்ள போறப்ப, ரொம்ப சந்தோஷமா இருந்தன். கேள்வி கேட்டாலும் எல்லாரும் சந்தோஷமா கேள்வி கேட்டீங்க. அந்த இரவு மிக இனிமையான இரவாக இருந்துச்சு. மோஸ்லீ நான் பேசினத உட்காந்து பாக்க மாட்டன். ஏனா படம் பாக்குறதே கூச்சமா இருக்கும். அந்தவொரு 14 நிமிஷம் உட்காந்து பாத்தன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. உடன் பணிபுரிந்தவர்களுக்கு மிக்க நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.