டி20 உலகக்கோப்பை- அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி!

டி20 உலகக்கோப்பை- அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி!

 

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. செயிண்ட் லூசியாவில் நடந்த போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தந்த ஆப்கானிஸ்தான் அணி…..சாதனை படைத்த கம்மின்ஸ்!

முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 92, சூர்யகுமார் யாதவ் 31, ஷிவம் துபே 28 ரன்களை எடுத்தனர்.

 

ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 3, குல்தீப் யாதவ் 2, அக்சர் படேல், பும்ரா தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஏற்கனவே இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு தகுதியான நிலையில் 3ஆவது அணியாக இந்திய அணி தகுதிப் பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதிச் செய்த இந்திய அணி!

வரும் ஜூன் 27- ஆம் தேதி நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. 2022 டி20 அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்ற நிலையில் அதற்கு பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.