“இந்தியன் தாத்தா மீண்டும் வருவதற்கு என்ன காரணம்?”- நடிகர் கமல்ஹாசன் விளக்கம்!

"இந்தியன் தாத்தா மீண்டும் வருவதற்கு என்ன காரணம்?"- நடிகர் கமல்ஹாசன் விளக்கம்!

 

பிரபல திரைப்பட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த திரைப்படம் வரும் ஜூலை 12- ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் இன்று (ஜூன் 25) இரவு 07.00 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தந்த ஆப்கானிஸ்தான் அணி…..சாதனை படைத்த கம்மின்ஸ்!

இந்த நிலையில், இந்தியன் 2 படக்குழுவினர் சென்னையில் இன்று (ஜூன் 25) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், “இந்தியன் 2 படத்துக்கான கருவை எங்களுக்கு இன்று கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. இன்று ஊழல் இன்னும் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தாவின் 2- வது வருகைக்கு பெரிய அர்த்தமே இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்- நடிகர் சூர்யா அறிக்கை!

அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் சித்தார்த், “தாத்தா கதறவிட போறாரு, அதமட்டும் எழுதி வச்சுக்கோங்க” என்று கூறினார்.