தான் இறந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் தவறானவை என இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது விளக்கம் அளித்துள்ளார்.
கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதிச் செய்த இந்திய அணி!
தனித்துவமான குரல் உச்சரிப்பு மற்றும் தமிழ் மொழியை அழுத்தம் திருத்தமாக பேசுவதன் மூலம் பிரபலமடைந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாட்டு நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
90- களில் பிறந்தவர்களில் மனம் கவர்ந்த அப்துல் ஹமீது உடல்நலக்குறைவால் காலமானதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. ஆனால் இது வெறும் வதந்தி என பி.ஹெச்.அப்துல் ஹமீது விளக்கம் அளித்துள்ளார்.
Abdul Hameed is alright ♥️https://t.co/kACD9w53cU#StopRumours #AbdulHameed https://t.co/pPZhXO4sWS pic.twitter.com/OmB7GE1l4W
— Sai (@sai_whispers) June 24, 2024
அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நான் இலங்கையில் நலமுடன் இருக்கிறேன்; பலர் தன்னை தொடர்புக் கொண்டு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்தேன் என்று நினைத்துக் கொண்டேன்.
“இந்தியன் தாத்தா மீண்டும் வருவதற்கு என்ன காரணம்?”- நடிகர் கமல்ஹாசன் விளக்கம்!
ஏற்கனவே, அப்துல் ஹமீது இறந்து விட்டதாக மூன்று முறை செய்தி வெளியாகி பின்னர் அது வதந்தி என உறுதிச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.