ரேஸ் கார் ஓட்டிய நடிகர் அஜித்தின் மிரட்டலான வீடியோ!

 

நடிகர் அஜித்குமார், பந்தய காரை வேகமாக இயக்கியது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றனர். நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“இந்தியன் தாத்தா மீண்டும் வருவதற்கு என்ன காரணம்?”- நடிகர் கமல்ஹாசன் விளக்கம்!

அதில், துபாயில் கடந்த ஜூன் 21- ஆம் தேதி பந்தய காரை நடிகர் அஜித்குமார் வேகமாக ஓட்டிச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த வீடியோவில் பாதுகாப்பு உடைகள் மற்றும் ஹெல்மெட் அணிந்துக் கொண்டு காரை ஸ்டார்ட் செய்வதும், கார் சுமார் 200 கி.மீ.க்கு அதிகமாக செல்லும் காட்சியும் இடம் பெற்றுள்ளன.

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தந்த ஆப்கானிஸ்தான் அணி…..சாதனை படைத்த கம்மின்ஸ்!

இந்த வீடியோ காட்சிகளை நடிகர் அஜித்குமார் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக, விடா முயற்சி படப்பிடிப்புக் குறித்த காட்சிகளை மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.